name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (32) கவடி ( KABADI )

சனி, ஜனவரி 02, 2016

புதிய தமிழ்ச் சொல் (32) கவடி ( KABADI )

புதுச்சொல் புனைவோம் !

KABADI = கவடி

---------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் நாட்டுப் புற விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது சடு குடு”. இந்த விளையாட்டு பலீஞ் சடு குடு”, ”பாடியாட்டம்உள்பட வெவ்வேறு பெயர்களில் வழங்கி வந்தன. அப்பெயர்களுள் ஒன்று தான் கவடி

 

இந்த விளையாட்டு தமிழ்நாட்டுக்கு அப்பாலும் பரவி, அந்தந்த வட்டாரத்திற்குத் தகுந்தாற்போல் பெயர்களில் மாற்றம் பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் கபடி” (KABADI) என்ற பெயர் வழங்கி வருகிறது.

 

கபடம்என்று ஒரு சொல்லைக் கேள்விப் பட்டிருப்பீர்கள் ! இதன் பொருள் வஞ்சகம்”, “சூழ்ச்சி”, “தந்திரம்என்பதாகும். எதிராளிக்குத் தெரியாமல், அவனைக் கவிழ்க்கவோ, வெல்லவோ, முடக்கவோ, தடுக்கவோ திட்டமிடுவதுதான் கபடம்”.


தமிழில் சில சொற்களில் வரும் கரம், வடமொழி ஆளுமை ஏற்பட்ட பின் கரமாகத் திரிபடைந்தது. வாலன்என்பது பாலன்என்றும், “வாலச்சந்திரன்என்பது பாலச்சந்திரன்என்றும் திரிபடைந்தது.

 

இவ்வாறே வாலாம்பாள்என்ற பெயர் பாலாம்பாள்என்றும் வாலிவன் என்பது வாலிபன்என்றும் வாலை வயதுஎன்பது பாலவயதுஎன்றும் திரிபடைந்திருக்கிறது. கலாவம்என்பது கலாபம்ஆகிவிட்டது.

 

கவடிஎன்ற தமிழ்ச்சொல் முன்பு புழக்கத்தில் இருந்தது. கவட்டுக்காரன்”, “கவட்டுக்காரி”, கவட்டுக்காரக் குழந்தைபோன்ற சொற்கள் இன்றும் கிராமப் புறங்களில் பேச்சு வழக்கில் உள்ளன. கவடுஎன்ற சொல்லில் இருந்து பிறந்ததே கவடி”. ”கவடிஎன்னும் தமிழ்ச்சொல் இந்தியில் கபடிஆகிவிட்டது. 

 

ஆமாம் ! கவடிவிளையாட்டு என்றால் என்ன ? இந்த விளையாட்டில் இரண்டு அணிகள் இடம் பெறும். ஒரு அணியில் 12 ஆளினர் இடம் பெறுவர். ஆனால் ஆட்டக் களத்தில் 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுற்றுக் கோடுகளன்றி (boundaries) நடுக்கோடு ஒன்றும், தாண்டுகோடுகள் இரண்டும் இருக்கும்.

 

நடுக்கோட்டின் இருபுறமும் உள்ள களங்களில் அந்தந்த அணி வீர்ர்கள் அணிவகுத்து நிற்பார்கள். முதலில் ஒரு அணியைச் சேர்ந்த வீர்ர் மூச்சு விடாமல் பாடிக்கொண்டு எதிரணிக் களத்திற்குள் நுழைவார். 

 

எதிரணி வீர்ர்களில் ஒருவரையோ பலரையோ தொட்டுவிட்டு, நடுக்கோடு வரை அவர் வந்து விட்டால், தொடப்பட்டவர்கள் ஆட்டமிழந்தவர்களாகக் கருதப் படுவர்.

 

பாடிச் செல்பவரை, நடுக்கோட்டுக்குத் திரும்பி வர விடாமல் எதிரணி வீர்ர்கள் பிடித்துவிட்டால், அவரும் ஆட்டம் இழந்தவராகக் கருதப் படுவார்.

 

பாடிச் செல்பவர் யாரைக் குறி வைக்கிறாரோ அவரை நேர்ப் பார்வையாகப் பார்க்காமல் வேறு யாரையோ பார்ப்பது போல் போக்குக் காட்டி, ”கவட்டுத் தனமாகஇயங்கி, குறி வைக்கப்பட்டவர் விழிப்புக் குலையும் போது அவரைத் தொட்டு வீழ்த்துவார்.

 

அதுபோன்றே, எதிர் அணியினரும் கவட்டுத்தனமாகஇயங்கி, பாடிச்செல்பவர் விழிப்புக் குலையும்போது, அவரைப் பிடித்து வீழ்த்துவர்.

 

இரு அணியினரும் இவ்வாறு கவட்டுத் தனமாகஇயங்கி விளையாடுவதால், இவ்விளையாட்டு கவடிஆட்டம் எனப் பெயர் பெற்றது.

 

தமிழகக் கிராமங்களில் , ஒருகாலத்தில் கவடிஆட்டம் எனப் பெயர் பெற்றிருந்த இந்த விளையாட்டு, இப்போது கபடிஎன்று திரிபடைந்து வழங்கி வருகிறது. கபடிஎன்ற சொல்லுக்கு இந்திக் காரர்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

 

எனவே இப்போதாவது விழிப்படைவோம் ! கபடியைக் கைவிடுவோம் ! கவடியைக் கைக்கொள்வோம் !

 

=========================================================      

                                 

KABADI  TOURNAMUNT

கவடிப் போட்டி

KABADI  TEAM

கவடி அணி

KABADI   REFEREE

கவடி நடுவர்

KABADI   MEN

கவடி ஆளினர்

KABADI   CHAMPIOM

கவடி வாகையர்

 

=========================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்

{02-01-2016}

 

=========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .